homepoetryTamil

சந்திரன்

நீலவானம் சிவக்க கதிரவன் விடைதர;
கடலலைகள் வரவேற்க
உலகம் இருளால் சூழ;
தென்றல் குளிரூட்ட
பறவைகள் மௌனம் காக்க;
மரங்கள் உன் வருகையை முரசுகொட்டி தெரிவிக்க;
நட்சத்திர நண்பர்கள் வானம் என்ற மைதானத்தில் உன்னை எதிர்ப்பாக;
குழந்தைகளின் கண்கள் உன்னைத் தேடி அலைபாய;
நீயோ! அவர்களிடம் கண்ணாம்பூச்சி ஆடுகிறாய்!
வெண்ணிலவே!!!
உன் அழகுமுகத்தை மேகத் திரையில் நீ மறைத்துக் கொள்ள தேடி தோற்றுப் போனார்கள் குழந்தைகள், அமாவாசை நாளில்…..
வளரும் குழந்தைகளின் மனதில் இடம் பிடித்தாய்,
வளர்பிறை நிலவாய்….
உன் தேடலை விடிமுயற்சியுடன் குழந்தைகள் தொடர மெல்ல மெல்ல உன் திரையில் இருந்து வெளிப்பட்டு உலக மக்களின் ஆழ்மனதில் இடம்பிடித்தாய்,
ஒளிர்கின்ற பௌர்ணமி நிலவாய்………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *